Sunday, July 8, 2007

காதல்

பூக்களின் சினேகிதி நீ என்றொரு செய்தி உண்டு
நான் செம்பருத்தி பூவை கூட நேசிக்க
ஆரம்பித்தது அப்படித்தான்..

ஊரே கவனிக்கிற உலக அழகு நீ ஆனால் எதையும்
கவனிக்காமல் இயல்பாய் இருக்கிறாய் பார் என்
இதயம் சிக்கி கொண்டது அப்படித்தான்..

விளக்கணைக்கிற கையோடு விழுந்து தூங்கிறவன்
எனது நித்திரயை இப்போது நீதான்
தீர்மானிக்கிறாய்..

கள்ளச் சாவிக்கு திறக்காத பூட்டு போட்டு பூட்டி
கொண்டவனை வெறும் ஒரு ஒற்றை
புன்னகையால் உடைத்திருக்கிறாய்..

தேரடி வீதியில் நேரடியாய் என் முகம் பார்க்காமல்
கடந்து சென்று என் முதுகு பார்த்த தேவதையே
உனக்கு தெரிய வாய்ப்பில்லை காதலில் விழுந்தவனுக்கு
உடம்பெல்லாம் கண் என்று...

2 comments:

Unknown said...

Kash Ye Dil Shishe ka bana hota
Chot Lagti to Beshak ye Fanah hota. .
Par Sunte Jab Wo Aawaz iske Tutne ki
Tab Unhe b Apne Gunah ka Ehsaas hota...

Yeh shayari bahooth kub hai.. mein apke yen shayari pe fida hu!!!

Unknown said...

par apne thoda idar udar spelling mistake kiya hai.. tik kar lene..